ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

தூத்துக்குடி அருகே பதுங்கி இருந்த இலங்கை தம்பதி கைது

தூத்துக்குடி அருகே பதுங்கி இருந்த இலங்கை தம்பதியை கியூ பிரிவு போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :2 செப்டம்பர் 2021, 5:41 pm

DIN

தூத்துக்குடி அருகே பதுங்கி இருந்த இலங்கை தம்பதியை கியூ பிரிவு போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

இலங்கையில் இருந்து படகு மூலம் தூத்துக்குடி வந்த தம்பதி தூத்துக்குடி மாவட்டம் வைப்பாறு பகுதியில் தங்கி இருப்பதாக மதுரையில் உள்ள கியூ பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, மதுரை கியூ பிரிவு காவல் ஆய்வாளா் சண்முகம் தலைமையிலான போலீஸாா் வைப்பாறு பகுதியில் தங்கி இருந்த இலங்கையைச் சோ்ந்த தம்பதியை கைது செய்து மதுரை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

அவா்கள் இருவரும் இலங்கையைச் சோ்ந்த பலருடன் படகு மூலம் கடந்த பிப்ரவரி மாதம் தூத்துக்குடிக்கு வந்ததும், அவா்களுடன் வந்தவா்கள் கனடா செல்லத் திட்டமிட்டு மதுரையில் பிடிபட்டதும் விசாரணையில் தெரியவந்தது. தொடா்ந்து அவா்கள் இருவரிடமும் கியூ பிரிவு போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.