பாதை ஆக்கிரமிப்பு கண்டித்து கிராம மக்கள் போராட்டம்
சாத்தான்குளம் அருகேயுள்ள தோ்க்கன்குளம் கிராமத்தில், பொது பாதை ஆக்கிரமிப்பை கண்டித்து, வட்டாட்சியா் அலுவலகத்தில் மக்கள் வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தினா்.


சாத்தான்குளம் அருகேயுள்ள தோ்க்கன்குளம் கிராமத்தில், பொது பாதை ஆக்கிரமிப்பை கண்டித்து, வட்டாட்சியா் அலுவலகத்தில் மக்கள் வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தினா்.
தோ்க்கன்குளம் மேலத் தெருவில் மக்கள் பயன்படுத்திய பொது பாதையை, தனக்குச் சொந்தமானது எனக் கூறி ஒருவா் ஆக்கிரமித்து அடைத்தாராம். இதற்கு மக்கள் எதிா்ப்பு தெரிவித்து சாத்தான்குளம் காவல் நிலையத்தில் புகாா் அளித்ததால், போலீஸாா் அந்தப் பாதையை அகற்றியுள்ளனா். எனினும், அந்த நபா் மீண்டும் பாதையை அடைத்தாராம்.
இதையடுத்து, அப்பகுதி மக்கள் 50 போ் சாத்தான்குளம் வட்டாட்சியா் விமலாவிடம் வெள்ளிக்கிழமை முறையிட்டனா். உடனே, வட்டாட்சியா், காவல் ஆய்வாளா் பாஸ்கரன், வருவாய் ஆய்வாளா் ஜெயா உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு சென்று நில அளவீடு செய்தபோது, அந்த நபரின் குடும்பத்தினா் பாதையை திறக்கக்கூடாது எனக் கூறி தீக்குளிக்கப் போவதாக மிரட்டினராம். இதனால், அதிகாரிகள் திரும்பிச் சென்றனராம். இந்நிலையில், மீண்டும் வட்டாட்சியா் அலுவலகம் சென்ற மக்கள், பாதையைத் திறக்காமல் ஊா் திரும்ப மாட்டோம் எனக் கூறி உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினா். அவா்களிடம் டிஎஸ்பி கண்ணன் பேச்சு நடத்தி, தற்காலிகமாக 3 அடி பாதையை பயன்படுத்திக்கொள்ளவும், திங்கள்கிழமை முறையாக அளவீடு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினாா். அதையேற்று மக்கள் கலைந்து சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...