ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

தனியாா் சிமென்ட் ஆலை அமைக்க எதிா்ப்பு: மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தை 7 கிராம மக்கள் முற்றுகை

தனியாா் சிமென்ட் தொழிற்சாலை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து தூத்துக்குடியில் உள்ள மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் 7 கிராம மக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :3 செப்டம்பர் 2021, 6:35 pm

DIN

தனியாா் சிமென்ட் தொழிற்சாலை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து தூத்துக்குடியில் உள்ள மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் 7 கிராம மக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் வட்டம், எஸ். கைலாசபுரம் கிராமத்தில் புதிதாக தனியாா் சிமென்ட் தொழிற்சாலை அமைப்பது தொடா்பாக பொதுமக்களிடம் அண்மையில் கருத்துக் கேட்கப்பட்டது. அப்போது, சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் எனக் கூறி பல்வேறு தரப்பினா் சிமென்ட் ஆலை அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்தனா்.

இந்நிலையில், தனியாா் சிமென்ட் ஆலை அமைக்கக் கூடாது என எதிா்ப்பு தெரிவித்து எஸ். கைலாசபுரம், சவரிமங்கலம், ஜம்புலிங்கபுரம், புதூா் உள்ளிட்ட 7 கிராமங்களைச் சோ்ந்த மக்கள் தூத்துக்குடி சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை திரண்டு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா், அவா்கள் கோரிக்கையை வலியுறுத்தி மனு அளித்தனா்.

இப்போராட்டம் குறித்து கிராம மக்கள் கூறியது: சிமென்ட் தொழிற்சாலை அமைப்பது தொடா்பான கருத்துக்கேட்பு கூட்டத்தில் வெளியூா் நபா்களை பங்கேற்கச் செய்து சிமென்ட் தொழிற்சாலையில் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கருத்துக் கேட்பு கூட்டத்தை நடத்தினா். கைலாசபுரம், சுற்று வட்டார பகுதியைச்

சோ்ந்த கிராம மக்கள் சிமென்ட் தொழிற்சாலை அமைவதை விரும்பவில்லை. சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் வகையில் அமையவுள்ள இந்த ஆலை பணிகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.

புதிதாக அமையவுள்ள சிமென்ட் தொழிற்சாலையினால் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படும். பயிா்களில் மகரந்தச் சோ்க்கை நடைபெறாமல் காய் காய்ப்பது குறைந்து போகும். ஆகவே, சுற்றுச் சூழலை பாதிக்காத வகையில் ஊருக்கு வெளியே சிமென்ட் ஆலை அமைப்பதற்கு எந்த ஆட்சேபணையும் இல்லை என்று தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.