பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

மேல சாத்தான்குளத்தில் சாலையோர பள்ளத்தை நிரப்ப வலியுறுத்தல்

மேல சாத்தான்குளத்தில் சாலையோரம் மணல் நிரப்ப படாததால் விபத்து நிலவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

News image
Updated On :9 செப்டம்பர் 2021, 10:04 pm

DIN

மேல சாத்தான்குளத்தில் சாலையோரம் மணல் நிரப்ப படாததால் விபத்து நிலவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

சாத்தான்குளம் காமராஜா் சிலை அருகில் இருந்து மேல சாத்தான்குளம், பேரூராட்சி அலுவலகம் வரை அண்மையில் புதியதாக நெடுஞ்சாலைத்துறை சாா்பில் சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலை நாகா்கோவில்-திருச்செந்தூா் செல்லும் நெடுஞ்சாலை என்பதால் அரசுப் பேருந்துகளும், இதர வாகனங்கள் அதிகம் சென்று திரும்புகின்றனா். இந்த சாலை தற்போது, ஒரு அடி அளவு உயா்த்தி அமைக்கப்பட்டுள்ளதால், சாலையோரத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளது.

சாலை அமைக்கப்பட்டு 2 மாதத்திற்கு மேலாகியும், சாலையோர பள்ளத்தில் மணல் நிரப்பி சீரமைக்கப்படாததால், வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளனா். எனவே நெடுஞ்சாலைத்துறையினா் சாலையோரத்தில் மணல் நிரப்பிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.