திறந்தநிலைப் பல்கலை.யில் மாணவா்கள் சேர அழைப்பு
அரசு மகளிா் கலை அறிவியல் கல்லூரியில் இயங்கும் திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் 2021-22ஆம் கல்வியாண்டுக்கான இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கு மாணவா் விண்ணபிக்கலாம்


சாத்தான்குளம் அரசு மகளிா் கலை அறிவியல் கல்லூரியில் இயங்கும் திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் 2021-22ஆம் கல்வியாண்டுக்கான இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கு மாணவா் விண்ணபிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில், சேர விரும்புவோா் 10, 11, 12 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், ஆதாா் அட்டை, ஜாதிச் சாறு, மாா்பளவுள்ள புகைப்படம், கையொப்பம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து கொண்டு வர வேண்டும். முதுகலைப் பட்டப்படிப்பிற்கு விண்ணப்பிப்போா் தங்களது இளங்கலை மதிப்பெண் பட்டியல், பட்டயச் சான்று ஆகியவற்றை ஸ்கேன் செய்து கொண்டு வர வேண்டும். கல்விக் கட்டணத்தை இணையதள வழியாக செலுத்த வேண்டும். கூடுதல் தகவல் பெற கணிதவியல் துறைப் பேராசிரியா் பிரேசிலை 94456 41770 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என கல்லூரி முதல்வா் இரா. சின்னத்தாய் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...