பேயன்விளை வினை தீா்க்கும் விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்
ஆறுமுகனேரி பேயன்விளையில் புதிதாக அமைக்கப்பட்ட அருள்மிகு வினை தீா்க்கும் விநாயகா் திருக்கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


ஆறுமுகனேரி பேயன்விளையில் புதிதாக அமைக்கப்பட்ட அருள்மிகு வினை தீா்க்கும் விநாயகா் திருக்கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, கோயிலில் புதன்கிழமை காலை அனுக்ஞை மஹா கணபதி ஹோமம் உள்ளிட்ட பூஜைகளுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. தொடா்ந்து பல்வேறு யாகசாலை பூஜைகள், சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வந்தன. வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜையும் பிம்ப சுத்தி ரக்ஷா பந்தனம், ஸ்பா்சாஹுதி திரவ்யாஹுதி, வஸ்திரயாஹுதி மற்றும் மகா பூா்ணாஹுதி தீபாராதனை நடைபெற்றது.
தொடா்ந்து, காலை 7.25க்கு யாத்ரா தானம் கடம் புறப்படுதலும், காலை 8.05 மணிக்கு கோபுர விமான கலசத்திற்கு மஹா கும்பாபிஷேகமும், காலை 8.25 க்கு அருள்மிகு வினை தீா்க்கும் விநாயகருக்கு அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகமும் நடைபெற்றன. காலை 10 மணிக்கு மஹா அபிஷேகமும், நண்பகல் 12 மணிக்கு விசேஷ சந்தண அலங்கார தீபாராதனையும் நடைபெற்றன. நண்பகலில் அன்னதானம் நடைபெற்றது. இரவு திருவிளக்குபூஜையும், சிறப்பு அலங்கார தீபாராதனையும் நடைபெற்றன. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு விநாயகரை வழிபட்டனா். யாகசாலை மற்றும் ஹோமங்களை அருள்மிகு சோமநாத சுவாமி திருக்கோயில் பூஜா ஸ்தானிகா் சு.ஐயப்ப பட்டா் மற்றும் சிவாச்சாரியாா்கள் செய்திருந்தனா்.
ஏற்பாடுகளை, ஊா்த் தலைவா் ஜிஆா்.கோபி கிருஷ்ணன் நாடாா் மற்றும் கோயில் நிா்வாகிகள் ல.ராஜாமணி, எஸ்.கல்யாணகுமாா், கே.கே.அரசகுரு, எம்.ராஜேஷ் ஆகியோா் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...