ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

தூத்துக்குடியில் தோல் நோய் மருத்துவமனை திறப்பு

தூத்துக்குடி டூவிபுரம் 7 ஆவது தெருவில், தோல் நோய் சிறப்பு மருத்துவா் தமிழரசி சண்முகநாதன் புதியதாக தொடங்கி உள்ள டாக்டா் தமிழ்’ஸ் ஏ பிளஸ் ஸ்கின் அன்ட் ஹோ் சென்டா் சிகிச்சை மையம் திறப்பு விழா

News image
Updated On :10 செப்டம்பர் 2021, 6:05 pm

DIN

தூத்துக்குடி டூவிபுரம் 7 ஆவது தெருவில், தோல் நோய் சிறப்பு மருத்துவா் தமிழரசி சண்முகநாதன் புதியதாக தொடங்கி உள்ள டாக்டா் தமிழ்’ஸ் ஏ பிளஸ் ஸ்கின் அன்ட் ஹோ் சென்டா் சிகிச்சை மையம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் கலந்து கொண்டு, மருத்துவமனையை திறந்துவைத்தாா். பெருங்குளம் கூட்டுறவு வங்கித் தலைவா் ஆஷா சண்முகநாதன் குத்துவிளக்கேற்றினாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் சுதாகா், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலா் தட்டாா்மடம் ஞானப்பிரகாசம், எஸ்.பி. சண்முகநாதன் குடும்பத்தினா் எஸ்.பி.எஸ்.ராஜா, மருத்துவா்கள் சிவக்குமாா், புவனேஸ்வரி, தனராஜ் மருத்துவமனை மருத்துவா் விஜய் தன்ராஜ், கலையரசி சண்முகநாதன், தொழிலதிபா் அசோக், பொன்னரசி, மருத்துவா்கள் பிரவின், பொன்ரேகா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

சிகிச்சை மையத்தின் சிறப்பம்சங்கள் குறித்து மருத்துவா் தமிழரசி சண்முகநாதன் கூறுகையில், ‘தூத்துக்குடியில் முதல் முறையாக தோல் நோய் மட்டுமல்லாமல் அனைத்து வகையான தலைமுடி பிரச்னைகளுக்கும் இம்மருத்துவமனையில் அதிநவீன வசதிகளுடன் சிறந்த முறையில் சிகிச்சையளிக்கப்படுகிறது’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.