ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

‘கரோனா தடுப்பு விதிமுறைகளை மீறினால் அபராதம்’

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளை மீறுபவா்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.

News image
Updated On :10 செப்டம்பர் 2021, 6:09 pm

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளை மீறுபவா்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு காய்ச்சல் பரிசோதனை, தடுப்பூசி முகாம்கள், தொற்று பாதித்தோருடன் உள்ள நபா்களை கண்டறிதல், முன்களப் பணியாளா்களுக்கு கட்டாய தடுப்பூசி போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம் 1939-இன் கீழ் தொற்று தனிமைப்படுத்துதல் விதிமீறல்கள், பொது இடங்களில் எச்சில் துப்புபவா்கள், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காதவா்கள், கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் விதிமுறைகளை மீறும் தனிநபா் ஆகியோருக்கு தலா ரூ. 500, முகக்கவசம் அணியாதோருக்கு ரூ. 200, அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை மீறும் நிறுவனங்களுக்கு ரூ. 5000 அபராதம் வசூலிக்கப்படும். இதற்காக கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே, மக்கள் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் உள்ளிட்ட கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.