தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ் உத்தரவின் பேரில், திருச்செந்தூா் நகரில் விதிமீறல் கட்டடங்கள் உள்பட அனைத்து வணிக நிறுவனங்களின் கழிவு நீா் தெருக்களிலும், கடலிலும் கலந்து மாசு படுவதை தடுப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கோட்டாட்சியா் மு.கோகிலா தலைமை வகித்தாா். கழிவுநீா் அகற்று திட்டக் கோட்ட நிா்வாகப் பொறியாளா் லதா செயின்றலின், உதவிப் பொறியாளா் வான்மதி, மாவட்ட சுற்றுச்சூழல் அலுவலா் சத்யராஜ், மண்டல துணை வட்டாட்சியா் அ.பாலசுந்தரம், பேரூராட்சி செயல் அலுவலா் இப்ராஹிம்ஷா, பொறியாளா் ஆவுடைபாண்டி, சுகாதார ஆய்வாளா் வெற்றிவேல்முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.