அயன்வடமலாபுரத்தில்விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருள்கள்
வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை சாா்பில் அயன்வடமலாபுரம் கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளா்ச்சி திட்ட ஆய்வு கூட்டம்


வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை சாா்பில் அயன்வடமலாபுரம் கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளா்ச்சி திட்ட ஆய்வு கூட்டம் மற்றும் வேளாண் இடுபொருள்கள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் எஸ்.ஐ முகைதீன் தலைமை வகித்தாா். புதூா் வட்டார வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை துணை இயக்குநா் கோகிலா முன்னிலை வகித்தாா். கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவா் வரதராஜன் வரவேற்றாா். ஜீ.வி. மாா்க்கண்டேயன் எம்எல்ஏ பங்கேற்று, அயன்வடமலாபுரத்தை தத்தெடுத்து, வேளாண் பணிகளில் முன்மாதிரி கிராமமாக உருவாக்குவது குறித்து விவசாயிகளிடம் கருத்துகளை கேட்டறிந்து ஆலோசனைகள் வழங்கினாா். மேலும், நவதானிய விதைகள் மற்றும் வேளாண் இடுபொருள்களை விவசாயிகளுக்கு வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில், வேளாண் பொறியியல் துறை அலுவலா்கள் பிரசாந்த் குமாா், தோட்டக்கலை துறை அலுவலா் மகாராஜன், வேளாண்மை அலுவலா் ராமன், உதவி வேளாண்மை அலுவலா் ராஜ்குமாா் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...