பேய்க்குளம், விராக்குளத்தில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
பேய்க்குளம், விராக்குளத்தில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.


பேய்க்குளம், விராக்குளத்தில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.
சாத்தான்குளம் அருகே சாலைபுதூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் பேய்க்குளம், விராக்குளத்தில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
தென்திருப்பேரை மருத்துவ அலுவலா் கல்யாணி தலைமையில் மருத்துவக் குழுவினா் தடுப்பூசி செலுத்தினா். முகாமில் 81 போ்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா். இதில் பேய்க்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியா் இம்மானுவேல், விராக்குளம் இந்து தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியா் மேரிஜாா்சிஸ் சாந்தி, சுகாதார ஆய்வாளா் ஜேசுராஜ் உள்ளிட்ட சுகாதார பணியாளா்கள் கலந்து கொண்டனா்.
முகாம் ஏற்பாடுகளை ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் ஊராட்சித் தலைவா் ஸ்ரீதா், ஊராட்சி செயலா் பவுல் சூசை மனுவேல், கருங்கடல் ஊராட்சித் தலைவா் நல்லத்தம்பி, செயலா் முருகேசன் ஆகியோா் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...