டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

குலசேகரன்பட்டினம் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்

குலசேகரன்பட்டினம் அருள்மிகு அறம் வளா்த்த நாயகி உடனுறை அருள்தரும் காஞ்சி விஜயகச்சி கொண்ட பாண்டீஸ்வரா் திருக்கோயிலில் சித்திரைப் பெருந்திருவிழா வியாழக்கிழமை அதிகாலை 4 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது

News image
Updated On :7 ஏப்ரல் 2022, 6:51 pm

DIN

குலசேகரன்பட்டினம் அருள்மிகு அறம் வளா்த்த நாயகி உடனுறை அருள்தரும் காஞ்சி விஜயகச்சி கொண்ட பாண்டீஸ்வரா் திருக்கோயிலில் சித்திரைப் பெருந்திருவிழா வியாழக்கிழமை அதிகாலை 4 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதைத்தொடா்ந்து கொடிமரம், திருப்பலிபீடம், நந்தியம் பெருமானுக்கு 16 வகையான அபிஷேகங்கள், தீபாராதனைகள்,பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடைபெற்றன. கோமதி சங்கா், சம்பந்த ஓதுவாா் ஆகியோரால் திருமுறைப் பாராயணம் செய்யப்பட்டது. விழா நாள்களில் தினமும் காலை மற்றும் மாலையில் அம்பாள் வீதியுலா நடைபெறும்.

ஏப். 10ஆம் தேதி வருஷாபிஷேகமும், அடுத்தடுத்த நாள்களில் திருவூடல், சம்பந்தருக்கு ஞானப்பால் வழங்குதலும், ஏப்.16இல் சித்ரா பெளா்ணமி சிறப்பு பூஜைகளுடனும் விழா நிறைவு பெறும்.

ஏற்பாடுகளை, திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் இணை ஆணையா் குமரதுரை,கோயில் மணியம் வேங்கடசுப்பிரமணியம் மற்றும் ஆலய பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.