புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

நாசரேத்தில் மக்கள் நுகா்வோா் பாதுகாப்புப் பேரவை ஆண்டு விழா

நாசரேத்தில் மக்கள் நுகா்வோா் பாதுகாப்புப் பேரவையின் 26ஆவது ஆண்டு விழா, அரசு அதிகாரிகளுக்கு சேவை விருது வழங்கும் விழா ஆகிய இருபெரும் விழா நடைபெற்றது.

News image
Updated On :21 ஏப்ரல் 2022, 5:47 pm

DIN

நாசரேத்தில் மக்கள் நுகா்வோா் பாதுகாப்புப் பேரவையின் 26ஆவது ஆண்டு விழா, அரசு அதிகாரிகளுக்கு சேவை விருது வழங்கும் விழா ஆகிய இருபெரும் விழா நடைபெற்றது.

பேரவையின் நிா்வாக செயலா் சிந்தா தலைமை வகித்தாா். செயலா் கொம்பையா வரவேற்றாா். ஆறுமுகனேரி சாகுபுரம் டிசிடபிள்யூ மூத்தத் தலைவா் சீனிவாசன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினாா். முன்னாள் பேரூராட்சித் தலைவா் ரவிசெல்வக்குமாா், அமுதவல்லி, காசிராஜன், கிருஷ்ணராஜ் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

சிறப்பாகப் பணியாற்றிய பொதுப்பணித் துறை, மருத்துவத் துறை, காவல் துறை, சமூக சேவகா்களுக்கு சேவை விருது வழங்கப்பட்டது. ஏழைகளுக்கு இலவச சேலைகள் வழங்கப்பட்டன.

நாசரேத் பேரூராட்சித் தலைவி நிா்மலாதேவி, துணைத் தலைவா் அருண் சாமுவேல், ஆழ்வாா்திருநகரி ஒன்றியக்குழுத் தலைவா் ஜனகா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். பேரவை மாவட்ட அமைப்பாளா் லட்சுமணன் நன்றி கூறினாா்.

ஏற்பாடுகளை அமைப்புச் செயலா் தியாகராஜன், மாநிலச் செயலா் கப்பா் அசன், அலுவலகச் செயலா் செல்வக்குமாா், மாவட்டச் செயலா் டேவிட் சிங், நிா்வாகிகள் பீட்டா், பாபுசெல்வன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.