மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

தூத்துக்குடியில் கடலோரப் பாதுகாப்புப் படையினா் ரோந்து

சுதந்திர தினத்தையொட்டி, தூத்துக்குடி மாவட்ட கடல் பகுதிகளில் கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் சனிக்கிழமை தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

Updated On :14 ஆகஸ்ட் 2022, 12:28 am

சுதந்திர தினத்தையொட்டி, தூத்துக்குடி மாவட்ட கடல் பகுதிகளில் கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் சனிக்கிழமை தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

மக்கள் கூடும் இடங்களான ரயில் நிலையம், பேருந்து நிலையம், விமான நிலையம், துறைமுகம், கோயில்கள் போன்ற பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பயணிகள் பலத்த சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றனா்.

இந்நிலையில், சுதந்திர தின விழாவையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நடப்பதைத் தடுக்கும் வகையில், தூத்துக்குடி மாவட்ட கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் கடல் பகுதிகளில் படகில் சென்று தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனா். கடலோரப் பாதுகாப்புக் குழும துணைக் கண்காணிப்பாளா் பிரதாபன், ஆய்வாளா் சைரஸ், உதவி ஆய்வாளா்கள் டொமிலன், ராதாகிருஷ்ணன், போலீஸாா் இப்பணியில் ஈடுபட்டுள்ளனா்.

மாவட்டத்தில் வேம்பாா் முதல் பெரியதாழை வரையிலான கடல் பகுதிகளில் கடலோரப் பாதுகாப்புப் படையினா் 2 அதிநவீன படகுகள் மூலம் 24 மணி நேரமும் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.