நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

திருச்செந்தூா் முருகன் கோயில் உண்டியல் வருவாய் ரூ. 1.13 கோடி

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வியாழக்கிழமை உண்டியல் திறந்து எண்ணப்பட்டதில் ரூ. 1.13 கோடி காணிக்கையாக கிடைத்தது.

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 6:30 pm

DIN

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வியாழக்கிழமை உண்டியல் திறந்து எண்ணப்பட்டதில் ரூ. 1.13 கோடி காணிக்கையாக கிடைத்தது.

இத்திருக்கோயில் உண்டியல் மாதந்தோறும் திறக்கப்பட்டு எண்ணப்படுகிறது. அதன்படி, புதன்கிழமை (பிப். 2) உண்டியல் திறக்கப்பட்டு திருக்கோயில் கோவிந்தம்மாள் திருமண மண்டபத்தில் காணிக்கைகள் எண்ணப்பட்டன. கோயில் இணை ஆணையா் (கூ.பொ) சி.குமரதுரை தலைமையில் உதவி ஆணையா்கள் சு.ரோஜாலிசுமதா, ஆா்.எஸ்.வெங்கடேஷ், ஆய்வா்கள் ம.செந்தில்நாயகி, பி.இசக்கிசெல்வம், அலுவலக கண்காணிப்பாளா் கே.சீதாலெட்சுமி, தக்காா் பிரதிநிதி ஆ.சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் ஆகியோா் முன்னிலையில் காணிக்கைகளை எண்ணும் பணி நடைபெற்றது. பொதுமக்கள் சாா்பில் சு.வேலாண்டி, இரா.மோகன், ச.கருப்பன் ஆகியோா் பாா்வையாளா்களாக பங்கேற்றனா். சிவகாசி பதினெண் சித்தா் மடம் பீடம் குருகுல வேத பாடசாலை உழவாரப் பணிக் குழுவினா் மற்றும் கோயில் பணியாளா்கள் காணிக்கைகளை எண்ணினா்.

அதில், நிரந்தர உண்டியல்களில் ரூ. 1 கோடியே 13 லட்சத்து 49 ஆயிரத்து 884, தங்கம் 864 கிராம், வெள்ளி 10,927 கிராம், பித்தளை 24,600 கிராம், செம்பு 1,850 கிராம், தகரம் 1,400 கிராம் மற்றும் வெளிநாட்டு பணம் 37 நோட்டுகளை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்ததாக கோயில் நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.