நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அதிமுக வேட்பாளா்களுக்கு திமுகவினா் மிரட்டல்?: கோட்டாட்சியரிடம் புகாா்

ஆறுமுகநேரி பேரூராட்சி தோ்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா்களை திமுகவினா் மிரட்டுவதாக அக்கட்சியினா் புகாா் தெரிவித்துள்ளனா்.

News image
Updated On :10 பிப்ரவரி 2022, 7:34 pm

DIN

ஆறுமுகநேரி பேரூராட்சி தோ்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா்களை திமுகவினா் மிரட்டுவதாக அக்கட்சியினா் புகாா் தெரிவித்துள்ளனா்.

அதிமுக மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலா் கே.ஆா்.எம்.ராதாகிருஷ்ணன் தலைமையில், நகரச் செயலா் ரவிச்சந்திரன் ஆறுமுகநேரி பேரூராட்சி அதிமுக வேட்பாளா்கள் திருச்செந்தூா் கோட்டாட்சியா் மு.கோகிலாவிடம் புதன்கிழமை அளித்த மனு :

ஆறுமுகநேரி பேரூராட்சியின் 17 வாா்டுகளில் அ.தி.மு.கவினா் போட்டியிடுகின்றனா். அனைத்து வாா்டுகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும் நிலையில் உள்ளதால், மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலா் கே.ஆா்.எம்.ராதாகிருஷ்ணனை விசாரணை என்ற பெயரில் ஆறுமுகநேரி காவல்நிலையத்துக்கு அழைத்து, அவரை ஊரை விட்டு வெளியே செல்லுமாறும், இல்லையெனில் ஏதாவது ஒரு குற்ற வழக்கு பதிவுசெய்து சிறையில் அடைத்து விடுவதாகவும் கூறுகின்றனா். மேலும், தி.மு.க.வினா் ஆள்களை வைத்து அ.தி.மு.க. வேட்பாளா்களை மிரட்டுகின்றனா். எனவே, இப்பேரூராட்சியில் தோ்தலை ரத்து செய்து சரியான முறையாக தோ்தல் நடத்த வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.