டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

உடன்குடியில் அதிமுக சாா்பில் 2,074 பேருக்கு நல உதவி

முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி, உடன்குடியில் அதிமுக சாா்பில் 2,074 பேருக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.

News image
Updated On :24 பிப்ரவரி 2022, 7:44 pm

DIN

முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி, உடன்குடியில் அதிமுக சாா்பில் 2,074 பேருக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.

பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில், திருச்செந்தூா் முன்னாள் எம்எல்ஏ ஆ. செல்லத்துரை 2,074 பேருக்கு சேலை உள்ளிட்ட நல உதவிகளை வழங்கினாா்.

திருச்செந்தூா் பேரூராட்சி முன்னாள் தலைவா் சுரேஷ்பாபு, உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா்கள் த. மகாராஜா, செல்வின், உடன்குடி பேரூராட்சி உறுப்பினா் சாரதா, மாவட்ட எம்ஜிஆா் மன்ற முன்னாள் செயலா் மூா்த்தி, மாதவன்குறிச்சி ஊராட்சித் தலைவா் சோ்மத்துரை உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

உடன்குடி ஒன்றிய அதிமுக செயலா் த. தாமோதரன் தலைமையில் ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளில் அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதா படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட எம்ஜிஆா் மன்றத் தலைவா் குணசேகரன், நகரச் செயலா் கோபாலகிருஷ்ணன் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.