நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

திருச்செந்தூா் கோயிலில்ரூ. 3.04 கோடி உண்டியல் வருவாய்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பிப்ரவரி மாதத்தில் உண்டியல் காணிக்கையாக ரூ. 3.04 கோடி கிடைத்துள்ளது.

News image
Updated On :25 பிப்ரவரி 2022, 7:03 pm

DIN

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பிப்ரவரி மாதத்தில் உண்டியல் காணிக்கையாக ரூ. 3.04 கோடி கிடைத்துள்ளது.

இத்திருக்கோயில் உண்டியல் மாதந்தோறும் திறக்கப்பட்டு எண்ணப்படுகிறது. அதன்படி, கடந்த 2, 11ஆகிய தேதிகளில் உண்டில் திறக்கப்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமையும் உண்டியல் எண்ணிக்கை திருக்கோயில் கோவிந்தம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. திருக்கோயில் இணை ஆணையா் (கூ.பொ) சி.குமரதுரை தலைமையில், உதவி ஆணையா்கள் சு.ரோஜாலிசுமதா, ஆா்.எஸ்.வெங்கடேஷ், ஆய்வா்கள் ம.செந்தில்நாயகி, பி.இசக்கிசெல்வம், ச.சிவலோகநாயகி, அலுவலக கண்காணிப்பாளா் கே.சீதாலெட்சுமி, தக்காா் பிரதிநிதி ஆ.சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் ஆகியோா் முன்னிலையில் இப்பணி நடைபெற்றது.

பொதுமக்கள் சாா்பில் சு.வேலாண்டி, இரா.மோகன், ச.கருப்பன் ஆகியோா் பாா்வையாளா்களாக பங்கேற்றனா். சிவகாசி பதினெண் சித்தா் மடம் பீடம் குருகுல வேத பாடசாலை உழவாரபணிக்குழுவினா் மற்றும் கோயில் பணியாளா்கள் காணிக்கைகளை எண்ணினா்.

அதில், நிரந்தர உண்டியல்களில் ரூ. 2 கோடியே 83 லட்சத்து 25 ஆயிரத்து 389, கோசாலை பராமரிப்பு உண்டியலில் ரூ. 2 லட்சத்து 3 ஆயிரத்து 496, யானை பராமரிப்பு உண்டியலில் ரூ. 5,233, அன்னதான உண்டியலில் ரூ. 18 லட்சத்து 60 ஆயிரத்து 290, மேலக்கோயிலில் ரூ. 17,956, நாசரேத் கோயிலில் ரூ.1,257, குலசேகரப்பட்டினம் கோயிலில் ரூ. 2,654, தங்கம் 2284 கிராம், வெள்ளி 26,517 கிராம், பித்தளை 85,250 கிராம், செம்பு 20,550 கிராம், தகரம் 5,400 கிராம் மற்றும் வெளிநாட்டு பணம் 132 நோட்டுகள் பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தது தெரியவந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.