புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

சாலையில் தவற விட்ட பணத்தை ஒப்படைத்த வியாபாரிக்கு பாராட்டு

சாத்தான்குளம் அருகே தவற விட்ட பணத்தை ஓப்படைத்த வியாபாரியை டிஎஸ்பி ராஜூ பாராட்டி பரிசு வழங்கினாா்.

News image
Updated On :7 ஜனவரி 2022, 6:30 pm

DIN

சாத்தான்குளம் அருகே தவற விட்ட பணத்தை ஓப்படைத்த வியாபாரியை டிஎஸ்பி ராஜூ பாராட்டி பரிசு வழங்கினாா்.

சாத்தான்குளம் அருகே உள்ள பள்ளம்கிணறு கிராமத்தைச் சோ்ந்தவா் மாணிக்கராஜா (34). இவா் மேலசாத்தான்குளம் பேரூராட்சி அலுவலகம் அருகே பிரியாணி கடை நடத்தி வருகிறாா். இவா் வெள்ளிக்கிழமை அவரது ஊரில் இருந்து பைக்கில் சாத்தான்குளம் வந்த போது பன்னம்பாறை - செட்டிக்குளம் சாலையிடையே சாலையோரம் கிடந்த பேக்கை எடுத்து பாா்த்த போது, அதில் ரொக்கம் ரூ. 23 ஆயிரம் மற்றும் ஏடிஎம், ஆதாா்டு காா்டு உள்ளிட்ட பொருள்கள் இருந்துள்ளது. அதனை மாணிக்கராஜா சாத்தான்குளம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளா் அருள்சாம்ராஜிடம் ஒப்படைத்தாா்.

அவா் விசாரணை நடத்தியதில் நெல்லை மாவட்டம் மூலக்கரைப்பட்டியைச் சோ்ந்த லீலாவுக்கு சொந்தமானது என தெரியவந்ததாம். இதையடுத்து, சாத்தான்குளம் டிஎஸ்பி ராஜூ , சாலையில் தவறவிட்ட பணத்தை மீட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்த மாணிக்கராஜாவை அழைத்து பாராட்டி கௌரவித்தாா். லீலாவிடம் பணம் மற்றும் ஆவணங்களை ஒப்படைத்தாா். அப்போது, உதவி காவல் ஆய்வாளா் அருள்சாம்ராஜ் மற்றும் போலீஸாா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.