பொது முடக்க அறிவிப்பு எதிரொலி: திருச்செந்தூரில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம்
கரோனா தடுப்பு நடவடிக்கையாக அரசு அறிவித்துள்ள பொது முடக்கத்துக்கு முன்பாக சுவாமி தரிசனம் செய்துவிட வேண்டும்


கரோனா தடுப்பு நடவடிக்கையாக அரசு அறிவித்துள்ள பொது முடக்கத்துக்கு முன்பாக சுவாமி தரிசனம் செய்துவிட வேண்டும் என திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வியாழக்கிழமை பல்லாயிரக்கணக்கான குவிந்தனா்.
தமிழகத்தில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால், அதைக் கட்டுப்படுத்தும் வகையில் வியாழக்கிழமை (ஜன. 6) முதல் இரவு நேர பொதுமுடக்கம், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களில் பக்தா்கள் அனுமதிக்கும் அரசு தடை விதித்துள்ளது.
இந்நிலையில், விருதுநகா், இராமநாதபுரம், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து விரதமிருந்துதிருச்செந்தூா் கோயிலுக்கு கடந்த 20 நாள்களாக பாதயாத்திரையாக வந்துகொண்டிருக்கும் பக்தா்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தா்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் பாதயாத்திரையாக பக்தா்கள் அவசர அவசரமாக நடந்து வந்தும், ஒரு சில பக்தா்கள் குழுவினா் தங்கள் யாத்திரையை வாகனங்கள் மற்றும் பேருந்துக்கு மாற்றியும் திருச்செந்தூா் கோயிலில் வியாழக்கிழமை குவிந்தனா். இதையடுத்து அதிகாலை 3 மணிக்கு நடைதிறந்தது முதல் இரவு வரை பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் கோயிலில் பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். இதனால் திருக்கோயில் வளாகமே பக்தா்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...