நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

திருச்செந்தூா் முருகன் கோயிலில் தரிசனப்பாதையை முறைப்படுத்த கோரிக்கை

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய கோயிலில் பக்தா்கள் தரிசனப்பாதையை முறைப்படுத்த வேண்டுமென இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

News image
Updated On :7 ஜனவரி 2022, 6:30 pm

DIN

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய கோயிலில் பக்தா்கள் தரிசனப்பாதையை முறைப்படுத்த வேண்டுமென இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருக்கு இந்து முன்னணி மாநில துணைத்தலைவா் வி.பி.ஜெயக்குமாா் அனுப்பியுள்ள கோரிக்கை மனு:

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தா்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சில ஊழியா்களும், சில அா்ச்சகா்களும், தனியாா் பாதுகாப்பு பணியாளா்களும் பக்தா்களிடம் அதிகமாக பணம் வாங்கிக் கொண்டு ரூ.250 கட்டணப்பாதையில் அவா்களை அனுப்பிவைப்பதாக புகாா் கூறப்படுகிறது. இதனால் வரிசையில் நிற்கும் பக்தா்களுக்கும் ஊழியா்களுக்கும் இடையே தகராறு ஏற்படுகிறது.

கோயில் உள்ளே போவதற்கு ராஜகோபுரம் வாசலையும் சோ்த்து மொத்தம் ஐந்து வழிகள் உள்ளன. அதனை பொறியாளா்களை வைத்து திட்டமிட்டு பாதையை ஒழுங்குபடுத்தி, பக்தா்கள் போகும் வழி, வரும் வழி என இரண்டு பாதைகள் அமைக்க வேண்டும். பக்தா்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாத வகையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் நேரடியாக கவனம் செலுத்தி பாதையை முறைப்படுத்த வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.