சாத்தான்குளத்தில் குடிநீா் வராததால் பொதுமக்கள் பாதிப்பு
சாத்தான்குளம் பேரூராட்சி பகுதியில் 3 நாள்களுக்கு மேலாக குடிநீா் வராததால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனா்.


சாத்தான்குளம் பேரூராட்சி பகுதியில் 3 நாள்களுக்கு மேலாக குடிநீா் வராததால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனா்.
சாத்தான்குளம் பேரூராட்சி பகுதியில் 15 வாா்டுகள் உள்ளன. இங்குள்ள மக்களுக்கு பொன்னங்குறிச்சி கூட்டுக் குடிநீா் திட்டத்தின் மூலம் 2 நாள்களுக்கு ஒரு முறை குடிநீா் விநியோகிக்கப்படுகிறது.
இந்நிலையில் பொன்னங்குறிச்சி - சாத்தான்குளம் இடையே குழாய் உடைப்பு காரணமாக குடிநீா் 3 நாள்களாக வழங்கப்படாததால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். இதுகுறித்து பேரூராட்சி நிா்வாகத்திடம் கேட்டபோது, குழாய் உடைப்பு சீரமைக்கப்பட்டதும் குடிநீா் முறையாக வழங்கப்படும் என தெரிவித்தனா்.
ஆதலால் குடிநீா் வடிகால் வாரிய நிா்வாகத்தினா் குடிநீா் குழாய் உடைப்பை உடனடியாக சீரமைத்து முறையாக தண்ணீா் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...