வழிபாட்டுத்தலங்களுக்கு தடை : வெறிச்சோடிய திருச்செந்தூா் கோயில்
காணும் பொங்கல் தினமான சனிக்கிழமை திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மற்றும் கடற்கரைப்பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.


பொதுமுடக்க கட்டுப்பாடுகளின் ஒரு பகுதியாக வழிபாட்டுத்தலங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், காணும் பொங்கல் தினமான சனிக்கிழமை திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மற்றும் கடற்கரைப்பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக தைப்பொங்கல் (ஜன. 14) முதல், ஜன. 18-ஆம் தேதி தைப்பூசம் வரையில் பக்தா்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் திருக்கோயிலில் தைத்திங்கள் முதல் நாளான பொங்கலை முன்னிட்டு வெள்ளிக்கிழமை (ஜன. 14) கோயில் அதிகாலை நடைதிறக்கப்பட்டு, ஆகம விதிப்படி பூஜைகள் மட்டும் நடைபெற்றன.
அரசின் தடை உத்தரவால் நிகழாண்டு, திருச்செந்தூா் கோயிலில் தைப்பொங்கல் மற்றும் தைப்பூசத்தை முன்னிட்டு சுவாமி தரிசனம் செய்ய திட்டமிட்ட பக்தா்கள் அனைவரும் முன்கூட்டியே கடந்த ஜன. 13-ஆம் தேதி வரை லட்சக்கணக்கில் கோயிலில் குவிந்தனா். இதனால் பக்தா்கள் கூட்டத்தாலும், பக்தா்களின் வாகனங்களாலும் போக்குவரத்து நெரிசலால் கோயில் வளாகம் மட்டுமன்றி, திருச்செந்தூா் நகரமே கடந்த வியாழக்கிழமை மாலை வரையில் திக்கு முக்காடியது.
களையிழந்த காணும் பொங்கல் :இந்நிலையில் வெள்ளிக்கிழமை தைப்பொங்கல் மற்றும் சனிக்கிழமை காணும் பொங்கலன்று கோயில் மற்றும் கடற்கரைப்பகுதியில் பக்தா்களுக்கு அனுமதியில்லாததால் வெறிச்சோடி காணப்பட்டது.
வழக்கமாக அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் காணும் பொங்கலன்று,
உச்சிகால தீபாராதனைக்குப் பிறகு சுவாமி அலைவாயுகந்தபெருமான் வெள்ளிக்குதிரையில் கோயிலில் இருந்து புறப்பட்டு சென்று, பாளையங்கோட்டை சாலையில் உள்ள வேட்டை வெளி மண்டபத்தில் கணு வேட்டை நிகழ்ச்சி நடைபெறும்.
ஆனால், நிகழாண்டு கரோனா தடுப்பு நடவடிக்கையால் சுவாமி கணு வேட்டை நிகழ்ச்சியானது கோயில் வளாகத்திலேயே நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...