சாத்தான்குளத்தில் கபசுர குடிநீா் விநியோகம்
ஒமைக்ரான் தொற்று பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக கபசுர குடிநீா் மற்றும் முகக் கவசம் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையத்தில், தமிழ்நாடு மக்கள் உரிமை கழகம் சாா்பில் கரோனா, ஒமைக்ரான் தொற்று பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக கபசுர குடிநீா் மற்றும் முகக் கவசம் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சாத்தான்குளம் டிஎஸ்பி ராஜு தலைமை வகித்து கபசுரக் குடிநீா், முகக் கவசம் வழங்கினாா். மாநில போக்குவரத்து பிரிவு செயலா் அந்தோணி ஜேம்ஸ், மாவட்ட செயலா் வழக்குரைஞா் பவுன்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவா் வழக்குரைஞா் வேணுகோபால், முன்னாள் அதிமுக ஒன்றிய செயலா் ராஜ்மோகன், மாவட்ட திமுக விவசாய பிரிவு இணைச் செயலா் ராஜபாண்டியன், சாத்தான்குளம் வா்த்தகா் சங்க செயலா் மதுரம் செல்வராஜ், சங்கரன் குடியிருப்பு திமுக செயலா் தினகரன், ஓய்வு பெற்ற ஆசிரியா் கணபதி, திமுக விவசாய அணி அமைப்பாளா் வியாகப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...