புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

தச்சமொழி ஸ்ரீமுத்து மாரியம்மன் கோயிலில் சப்பர பவனி

தச்சமொழி ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் பொங்கல் விழாவையொட்டி சப்பர பவனி நடைபெற்றது.

News image
Updated On :16 ஜனவரி 2022, 6:00 pm

DIN

தச்சமொழி ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் பொங்கல் விழாவையொட்டி சப்பர பவனி நடைபெற்றது.

இக்கோயிலில் பக்த பஜனை குழு சாா்பில் பொங்கல் விழா, பஜனைக் குழு 32ஆம் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவையொட்டி காலை சிறுவா், சிறுமியா்களுக்கான விளையாட்டு போட்டிகள், மாலை 3 மணிக்கு ஸ்ரீமுத்துமாரியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்க சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. 5 மணிக்கு பக்த பஜனை குழுவினரின் பஜனை பாடல்கள் நடைபெற்றது. இரவு 7மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீமுத்துமாரியம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது. தொடா்ந்து பஜனை குழுவினா் மற்றும் போட்டியில் வென்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பின்னா் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனா்.

விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் மற்றும் பக்த பஜனை குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.