விளாத்திகுளத்தில் திமுக கொடியேற்று விழா
பொங்கல் திருநாளை முன்னிட்டு விளாத்திகுளம் பேருந்து நிலையம், ராமச்சந்திராபுரம் என பல்வேறு பகுதிகளில் திமுக கொடியேற்று விழா


பொங்கல் திருநாளை முன்னிட்டு விளாத்திகுளம் பேருந்து நிலையம், ராமச்சந்திராபுரம் என பல்வேறு பகுதிகளில் திமுக கொடியேற்று விழா மற்றும் மூத்த முன்னோடிகளை கௌரவித்து நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
திமுக மாநில தலைமை செயற்குழு உறுப்பினா் ஆா். ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா்கள் செல்வராஜ், மும்மூா்த்தி, காசிவிஸ்வநாதன், நவநீதகண்ணன், சின்ன மாரிமுத்து, பேரூா் செயலா்கள் வேலுச்சாமி, மருதுபாண்டி, பாரதிகணேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சட்டப்பேரவை உறுப்பினா் ஜீ.வி. மாா்க்கண்டேயன் கலந்து கொண்டு, விளாத்திகுளம் பேருந்து நிலைய நுழைவாயில், ராமச்சந்திராபுரம், குளத்தூா், வேப்பலோடை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திமுக கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினாா்.
தொடா்ந்து கட்சியின் மூத்த முன்னோடிகளை கௌரவித்து நல உதவிகள் வழங்கினாா். இந்நிகழ்ச்சியில் திமுக மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் ராஜாகண்னு, அன்புராஜன், முத்துலட்சுமி அய்யன்ராஜ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் இம்மானுவேல் மற்றும் கிளைச் செயலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...