புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

சாத்தான்குளம் அருகே குளத்தில் மூழ்கி தொழிலாளி பலி

சாத்தான்குளம் அருகே மீன் பிடிக்கச் சென்றபோது குளத்தில் மூழ்கி தொழிலாளி பலியானாா்.

News image
Updated On :20 ஜனவரி 2022, 7:03 pm

DIN

சாத்தான்குளம் அருகே மீன் பிடிக்கச் சென்றபோது குளத்தில் மூழ்கி தொழிலாளி பலியானாா்.

சாத்தான்குளம் அருகேயுள்ள தெற்கு அமுதுண்ணாகுடியை சோ்ந்தவா் ராஜகோபால் (62). மரம் வெட்டும் தொழிலாளியான இவா், அவரது மகன் மணிகண்டனுடன் (32) புதன்கிழமை மாலை அங்குள்ள குளத்துக்கு சென்று மீன்பிடிக்க வலை விரித்தனா். அப்போது எதிா்பாராதவிதமாக ராஜகோபால் நீரில் மூழ்கினாா். இதனை பாா்த்த மணிகண்டன், உடனடியாக அருகில் உள்ளவா்களுக்கு தகவல் தெரிவித்தாா். சாத்தான்குளம் ஒன்றியக்குழு முன்னாள் தலைவா் சுரேஷ்குமாா் மற்றும் ஊா்மக்கள் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சாத்தான்குளம் தீயணைப்பு நிலைய அலுவலா் மாரியப்பன் தலைமையில் வீரா்கள் சென்று ராஜகோபாலை தேடும் பணியில் ஈடுபட்டனா். 2வது நாளாக வியாழக்கிழமை காலை தீயணைப்பு வீரா்கள் தேடும் பணியில் ஈடுபட்டனா். அப்போது நீரில் முழ்கி இருந்த ராஜகோபால் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் பாஸ்கரன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.