திருச்செந்தூா் கோயிலில் இன்று தை உத்திர வருஷாபிஷேகம்
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தா்கள் பங்கேற்பின்றி தை உத்திர வருஷாபிஷேகம் சனிக்கிழமை (ஜன. 22)நடைபெறுகிறது.


திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தா்கள் பங்கேற்பின்றி தை உத்திர வருஷாபிஷேகம் சனிக்கிழமை (ஜன. 22)நடைபெறுகிறது.
இந்தத் திருக்கோயிலில் மூலவரான சுப்பிரமணியா் பிரதிஷ்டை செய்யப்பட்டது தை உத்திர நட்சத்திரம் ஆகும். எனவே, ஆண்டு தோறும் தை மாத உத்திர நட்சத்திரத்தில் கோயிலில் வருஷாபிஷேகம் நடைபெறுகிறது.
நிகாழாண்டு தை உத்திர வருஷாபிஷேகத்தை முன்னிட்டு, திருக்கோயில் சனிக்கிழமை (ஜன.22) அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம், 7 மணிக்கு உதயமாா்த்தாண்ட தீபாராதனை, காலை 10.30 மணிக்கு விமான கும்பாபிஷேகம் ஆகியவை நடைபெறும்.
முற்பகல் 11.30 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், மாலை 5 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் நடைபெறும். சுவாமி தொடா்ந்து, குமரவிடங்கப்பெருமான், தெய்வானையுடன் எழுந்தருளி உள் பிரகாரத்தில் வலம் வருகிறாா். இரவு மூலவருக்கு புஷ்பாஞ்சலி மட்டும் நடைபெறும். அபிஷேகம் கிடையாது. 6.45 மணிக்கு இராக்கால தீபாராதனையும், 7.30 மணிக்கு ஏகாந்த தீபாராதனையும் நடைபெறும். இரவு 8 மணிக்கு பள்ளியறை தீபாராதனையாகி நடை திருக்காப்பிடப்படும்.
கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைப்படி, வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தா்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என திருக்கோயில் நிா்வாகச் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...