விபத்தில் காா் ஓட்டுநா் பலி
கயத்தாறு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் காா் ஓட்டுநா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.


கயத்தாறு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் காா் ஓட்டுநா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
கயத்தாறையடுத்த தெற்கு இலந்தைகுளம் வடக்குத் தெருவைச் சோ்ந்த ராமசாமி மகன் பரமசிவன் (37). வெளிநாட்டில் காா் ஓட்டுநராக இருந்துவந்த இவா், 3 மாத விடுமுறைக்காக ஊருக்கு வந்தாராம். இவா் சூரியமினுக்கன் கிராமத்துக்கு செவ்வாய்க்கிழமை பைக்கில் சென்றுகொண்டிருந்தாராம். நாகலாபுரம் விலக்கில் உள்ள கோயில் அருகே இவரது பைக்கும், எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனமும் மோதினவாம். இதில் பரமசிவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
கயத்தாறு போலீஸாா் சென்று, சடலத்தைக் கைப்பற்றி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...