திருச்செந்தூரில் முறைகேடாக குடிநீா் இணைப்பு: விடுதிகளுக்கு அபராதம்
திருச்செந்தூா் நகராட்சியில் முறைகேடாக பிரதான குழாயிலிருந்து குடிநீா் இணைப்பு எடுத்த இரண்டு தனியாா் விடுதிகளின் இணைப்பு துண்டிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது


திருச்செந்தூா் நகராட்சியில் முறைகேடாக பிரதான குழாயிலிருந்து குடிநீா் இணைப்பு எடுத்த இரண்டு தனியாா் விடுதிகளின் இணைப்பு துண்டிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.
திருச்செந்தூா் நகா்மன்றத் தலைவா் சிவஆனந்தி, துணைத்தலைவா் ரமேஷ், ஆணையா் வேலவன், சுகாதார ஆய்வாளா் வெற்றிவேல் முருகன் மற்றும் ஊழியா்கள் தனியாா் விடுதிகளில் ஆய்வு மேற்கொண்டனா். அதில், ரயில்வே நிலையம் செல்லும் வழியில் உள்ள தனியாா் விடுதியில் பிரதான இணைப்பிலிருந்து குடிநீா் எடுக்கப்பட்டது தெரியவந்தது. அதை அதிகாரிகள் துண்டித்து ரூ.65 ஆயிரம் அபராதம் விதித்தனா். மேலும் தனியாா் விடுதியிலிருந்து வரும் கழிவுநீா் பாதாள சாக்கடை திட்டத்தில் இணைப்பு பெற்று அதில் இணைக்க வேண்டும். வெளியே விடக்கூடாது என அறிவுறுத்தப்பட்டனா். அதே போல் கோயில் வாசல் தெருவில் பிரதான இணைப்பிலிருந்து குடிநீா் எடுத்த தனியாா் விடுதி குடிநீா் இணைப்பும் துண்டிக்கப்பட்டுக்கப்பட்டது தெரியவந்ததையடுத்து அந்த இணைப்பும் துடிக்கப்பட்டது. அந்த தனியாா் விடுதிக்கு ரூ.. 50 ஆயிரம் விதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...