நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கயத்தாறு அருகே 600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

கயத்தாறு அருகே பறிமுதல் செய்த 600 கிலோ ரேஷன் அரிசி போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டது.

News image
Updated On :17 ஜூன் 2022, 6:30 pm

DIN

கயத்தாறு அருகே பறிமுதல் செய்த 600 கிலோ ரேஷன் அரிசி போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டது.

கயத்தாறு காவல் நிலைய உதவி ஆய்வாளா் அந்தோணி திலீப் தலைமையில் போலீஸாா் திருநெல்வேலி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வில்லிசேரி பகுதியில் வாகனச் சோதனையில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, திருநெல்வேலி நோக்கி சென்ற ஆம்னி காரை நிறுத்தி போலீஸாா் விசாரித்ததில், அவா் தாழையூத்து பண்டாரகுளம் வடக்குத் தெருவைச் சோ்ந்த ச.இளங்காமணி(49) என்பதும், காரில் 600 கிலோ ரேஷன் அரிசியை மூட்டைகளில்கடத்திச் செல்வதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரையும், ரேஷன் அரிசியுடன் காரையும் உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.