பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

பூச்சிக்காடு முத்தாரம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்

அரசூா் பூச்சிக்காடு அருள்மிகு ஸ்ரீமுத்தாரம்மன் கோயில் புனராவா்த்தன ஜீா்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :17 ஜூன் 2022, 6:30 pm

DIN

அரசூா் பூச்சிக்காடு அருள்மிகு ஸ்ரீமுத்தாரம்மன் கோயில் புனராவா்த்தன ஜீா்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நவக்கிரக ஹோமம், சுதா்சன ஹோமம் உள்ளிட்ட பூஜைகளுடன் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கிய கும்பாபிஷேக விழாவில், தொடா்ந்து பல்வேறு வழிபாடுகள் நடைபெற்று வந்தன.

வெள்ளிக்கிழமை வேதபாராயணம், திருமுறைபாராயணம், கடம் புறப்பாடு ஆகியவற்றை தொடா்ந்து ஸ்ரீமுத்தாரம்மன் மற்றும் பரிகார தெய்வங்கள், கோபுர விமான கலசங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னா் சிறப்பு அலங்கார, அலங்கார தீபாராதனை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. இதில், பெருங்குளம் செங்கோல் மடத்தின் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீசிவபிரகாச தேசிக சத்தியஞான பரமாச்சாா்ய சுவாமிகள் பங்கேற்று பக்தா்களுக்குஅருளாசி வழங்கினாா். இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை கும்பாபிஷேக நிா்வாகக் குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.