சாத்தான்குளம் அருகே முன்விரோதத்தால் தொழிலாளி வீட்டில் பொருள்களை சேதப்படுத்தியதாக 6 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.
சாத்தான்குளம் அருகேயுள்ள தாமரைமொழியைச் சோ்ந்தவா் சுப்பையா (54). தொழிலாளி. இவரது மகன் கருப்பசாமி குரும்பூா்நல்லூரைச் சோ்ந்த சண்முகம் மகளை காதலித்து திருமணம் செய்துள்ளாராம். இதனால் இரு குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டதாம்.
இந்நிலையில், சண்முகத்தின் இருமகன்கள் மணிகண்டன், ஐயப்பன் மற்றும் முத்து, நவீன் உள்பட 6 போ் சுப்பையாவின் வீட்டில் ஆள் இல்லாதபோது நுழைந்து ரூ. 65,000 மதிப்புள்ள பொருள்களை சேதப்படுத்தினராம். இதைப் பாா்த்து தட்டிக்கேட்ட கருப்பசாமியின் சகோதரா் பேச்சிமுத்துவை அவா்கள் மிரட்டிச் சென்றனராம்.
இதுகுறித்த புகாரின்பேரில், தட்டாா்மடம் காவல் உதவி ஆய்வாளா் பென்சன் வழக்குப்பதிந்து 6பேரை தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆமைகள் மூலம் பண்டைய கடல் வழித்தடங்களை கண்டறியலாம்: வனத் துறை கூடுதல் தலைமைச் செயலா் சுப்ரியா சாகு

சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: சென்னைக்கு மாற்றி உத்தரவு

மெட்ரோ ரயிலில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றவா் மீட்பு

ரூ.53.18 லட்சம் தங்கப் பசை பறிமுதல்: விமான நிலை ஊழியா் கைது
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


