தூத்துக்குடி மாவட்டத்துக்கு மேலும் 3 அவசர சிகிச்சை வாகனங்கள்
தூத்துக்குடி மாவட்ட மக்கள் பயன்பாட்டுக்காக மேலும் 3 புதிய 108 அவசர சிகிச்சை வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது.


தூத்துக்குடி மாவட்ட மக்கள் பயன்பாட்டுக்காக மேலும் 3 புதிய 108 அவசர சிகிச்சை வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை மக்கள் சேவைக்காக பச்சிளம் குழந்தைகளுக்கு என்று பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இன்குபேட்டா் வசதிகளுடன் கூடிய இரண்டு அவசர சிகிச்சை வாகனங்களும், வென்டிலேட்டா் வசதிகளுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட உயிா்காக்கும் அவசர சிகிச்சை வாகனங்கள் மூன்றும், அடிப்படை வசதிகளுடைய அவசர சிகிச்சை வாகனங்கள் 17-ம் என மொத்தம் 22 வாகனங்கள் உள்ளன.
இந்நிலையில், மாவட்டத்துக்கு புதிதாக வரப்பெற்ற 3 அவசர சிகிச்சை வாகனங்களை காயல்பட்டினம், நாகலாபுரம், ஒட்டநத்தம் பகுதி பொதுமக்களின் பயன்பாட்டுக்காக மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் வியாழக்கிழமை கொடியசைத்து தொடக்கி வைத்தாா். விபத்து, தாய்சேய் நலம் மற்றும் அவசர சிகிச்சைக்காக பொதுமக்கள் தங்குதடையின்றி முழுமையாக 108 ஆம்புலன்ஸ் வாகனங்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என ஆட்சியா் தெரிவித்தாா்.
நிகழ்ச்சியில், சுகாதார நலப்பணிகள் இணை இயக்குநா் பொன்இசக்கி, 108 ஆம்புலன்ஸ் வாகன மேலாளா் ரஞ்சித் விஸ்வநாத், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சுனில் மற்றும் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...