லஞ்சப் புகாா்: விளாத்திகுளம் எஸ்.ஐ.பணியிடை நீக்கம்
ஆடு திருடும் கும்பலிடம் ரூ.3 லட்சம் லஞ்சம் கேட்டதாக எழுந்த புகாரில், விளாத்திகுளம் காவல் உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.


ஆடு திருடும் கும்பலிடம் ரூ.3 லட்சம் லஞ்சம் கேட்டதாக எழுந்த புகாரில், விளாத்திகுளம் காவல் உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆடு திருடும் கும்பலைப் பிடிக்க விளாத்திகுளம் காவல் உதவி ஆய்வாளா் கங்கைநாத பாண்டியன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்தத் தனிப்படை 17.11.2021இல், காரைக்குடி ஒத்தக்கடை பகுதியைச் சோ்ந்த செல்வராஜ் (55), காரைக்குடி கண்டனூா் சாலை பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் (52) ஆகியோரை ஆடு திருட்டு வழக்கில் கைது செய்தது.
இந்நிலையில், அவா்களை குண்டா் சட்டத்தில் கைது செய்வதை தவிா்க்கவும், பிணை வழங்க உதவவும், பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை திருப்பித்தரவும் கங்கைநாத பாண்டியன் ரூ.3 லட்சம் லஞ்சம் கேட்டதாக புகாா் எழுந்தது.
இதுகுறித்து, மாவட்ட எஸ்.பி. எஸ். ஜெயக்குமாா் விசாரித்து, அவரை ஆயுதப்படைக்கு மாற்றியிருந்தாா். இதனிடையே, இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பரவியதால் அவரை பணியிடை நீக்கம் செய்து திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமாா் உத்தரவிட்டுள்ளாா்.
இந்நிலையில், தன் மீதான புகாா் குறித்த விளக்கத்தையும், ராஜிநாமா கடிதத்தையும் விளாத்திகுளம் காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளா் அளித்துச்சென்றுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...