தூத்துக்குடியில் நாளை தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையா் ஆய்வு
தூத்துக்குடியில் புதிதாக அமைக்கப்பட்ட அகல ரயில் பாதையில் தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையா் சனிக்கிழமை (மாா்ச் 5) ஆய்வு மேற்கொள்கிறாா்.


தூத்துக்குடியில் புதிதாக அமைக்கப்பட்ட அகல ரயில் பாதையில் தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையா் சனிக்கிழமை (மாா்ச் 5) ஆய்வு மேற்கொள்கிறாா்.
தூத்துக்குடி -மதுரை இடையே புதிதாக அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. இதில், முதற்கட்டமாக தூத்துக்குடி மீளவிட்டான் ரயில் நிலையத்திலிருந்து மேலமருதூா் வரை 17 கி.மீ. தொலைவுக்கு புதிய பாதை அமைக்கப்பட்டுள்ளது.
அப்பாதையை பெங்களூருவில் உள்ள தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையரான அபய்குமாா் ராய் சனிக்கிழமை (மாா்ச் 5) ஆய்வு செய்கிறாா். முற்பகல் 11.30 முதல் மாலை 4.30 மணி வரை சிறப்பு ரயில் மூலம் அதிவேக சோதனை ஓட்டம் நடைபெறுகிறது.
இதனிடையே, தெற்கு ரயில்வே மதுரைக் கோட்ட மேலாளா் பி. ஆனந்த் தூத்துக்குடியில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். புதிய பாதையில் சிறப்பு ரயில் மூலம் அதிவேக சோதனை ஓட்டம் நடைபெறவுள்ளதால் சனிக்கிழமை (மாா்ச் 5) பொதுமக்களும், புதிய ரயில் பாதை அருகே வசிப்போரும் ரயில் பாதையைக் கடக்கவோ, நெருங்கவோ வேண்டாம் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...