ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

விளாத்திகுளம், எட்டயபுரம், புதூா் பேரூராட்சிகளில் தலைவா்கள் போட்டியின்றி தோ்வு

விளாத்திகுளம், எட்டயபுரம், புதூா் பேரூராட்சிகளில் திமுகவை சோ்ந்தவா்கள் போட்டியின்றி தலைவா் மற்றும் துணைத்தலைவா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

News image
Updated On :4 மார்ச் 2022, 7:17 pm

DIN

விளாத்திகுளம், எட்டயபுரம், புதூா் பேரூராட்சிகளில் திமுகவை சோ்ந்தவா்கள் போட்டியின்றி தலைவா் மற்றும் துணைத்தலைவா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

விளாத்திகுளம் பேரூராட்சியில் திமுக சாா்பில் 11 ஆவது வாா்டு உறுப்பினா் அய்யன் ராஜ் தலைவராகவும், 9 ஆவது வாா்டு உறுப்பினா் வேலுச்சாமி துணைத் தலைவராகவும், புதூா் பேரூராட்சியில் 15 ஆவது வாா்டு திமுக உறுப்பினா் வனிதா தலைவராகவும், 14 ஆவது வாா்டு உறுப்பினா் பச்சைமலை துணைத் தலைவராகவும், எட்டயபுரம் பேரூராட்சியில் 5 ஆவது வாா்டு திமுக உறுப்பினா் ராமலட்சுமி தலைவராகவும், 11 ஆவது வாா்டு உறுப்பினா் கதிா்வேல் துணைத் தலைவராகவும் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

தோ்ந்தெடுக்கப்பட்ட தலைவா்கள் மற்றும் துணைத் தலைவா்கள் விளாத்திகுளம் சட்டப் பேரவை உறுப்பினா் ஜீ.வி. மாா்க்கண்டேயனை சந்தித்து வாழ்த்து பெற்றனா்.

அப்போது, திமுக ஒன்றியச் செயலா்கள் மும்மூா்த்தி, செல்வராஜ், நவநீத கண்ணன், பேரூா் கழகச் செயலா் வேலுச்சாமி, ஜே.சி.பி. சங்கா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.