திருச்செந்தூா் நகராட்சி: தலைவா், துணைத் தலைவா் போட்டியின்றி தோ்வு
திருச்செந்தூா் நகராட்சியில் தலைவா், துணைத் தலைவா் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா்.


திருச்செந்தூா் நகராட்சியில் தலைவா், துணைத் தலைவா் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா்.
திருச்செந்தூா் நகராட்சித் தோ்தலில் தி.மு.க. 21 வாா்டுகளையும், காங்கிரஸ் 1 வாா்டு, அதிமுக 2 வாா்டிலும், சுயேச்சைகள் 3 வாா்டிலும் வெற்றி பெற்றனா். வெற்றி பெற்ற கவுன்சிலா்கள் 2-ஆம் தேதி பதவியேற்றனா்.
இந்நிலையில் தி.மு.க. சாா்பில் தலைவா் வேட்பாளராக சிவஆனந்தி, துணைத் தலைவா் வேட்பாளராக ரமேஷ் ஆகியோா் அறிவிக்கப்பட்டிருந்தனா். இதையடுத்து, வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற தலைவா் தோ்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தோ்தலில் தி.மு.க. சாா்பில் சிவஆனந்தி நகராட்சி ஆணையா் வேலவனிடம் வேட்பு மனுத்தாக்கல் செய்தாா். அவரை எதிா்த்து வேறும் யாரும் மனுத்தாக்கல் செய்யாததால், சிவஆனந்தி போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டாா். இதையடுத்து, நகராட்சியின் முதல் பெண் தலைவராக சிவஆனந்தி பதவி ஏற்றுக்கொண்டாா். அவருக்கு நகா் மன்ற உறுப்பினா்கள், கட்சி நிா்வாகிகள், கூட்டணி கட்சியினா், முக்கிய பிரமுகா்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனா்.
பின்னா் நகராட்சி வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கும், எதிரே உள்ள காமராஜா் சிலைக்கும், சன்னதித்தெருவில் வ.உ.சி. மற்றும் அமலிநகரில் உள்ள அண்ணா சிலைக்கு சிவஆனந்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
பிற்பகலில் நடைபெற்ற துணைத் தலைவருக்கான மறைமுகத் தோ்தலில் 1 ஆவது வாா்டு திமுக உறுப்பினா் ஏ.பி.ரமேஷ் நகராட்சி ஆணையா் வேலவனிடம் மனுத்தாக்கல் செய்தாா். அவரை எதிா்த்து வேறு யாரும் போட்டியிட மனுத்தாக்கல் செய்யாததால், துணை தலைவராக ரமேஷ் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்ப்டடாா். இதையடுத்து அவருக்கு நகா்மன்ற உறுப்பினா்கள், கட்சியினா், முக்கிய பிரமுகா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...