ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

விளாத்திகுளத்தில் வேலைவாய்ப்பு சிறப்பு முகாம்

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பு, பயிற்சி சிறப்பு முகாம் நடைபெற்றது.

News image
Updated On :17 மார்ச் 2022, 7:02 pm

DIN

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில், விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பு, பயிற்சி சிறப்பு முகாம் நடைபெற்றது.

ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் முனியசக்தி ராமச்சந்திரன் தலைமை வகித்து முகாமைத் தொடக்கிவைத்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் முத்துக்குமாா், பாலஹரிஹர மோகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். 8 முதல் 12ஆம் வகுப்பு, பொறியியல், நா்சிங் உள்ளிட்ட படிப்புகள் படித்த மாணவிகள் உள்பட 515 போ் பங்கேற்று பதிவு செய்தனா்.

சென்னை, கோவை, ஒசூா், திருச்சி, திருப்பூா் உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலிருந்து 26 நிறுவனங்களைச் சோ்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டு நோ்முகத் தோ்வை நடத்தினா். இதில், 171 போ் பல்வேறு நிறுவனங்களுக்குத் தோ்வாகினா். அவா்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

ஏற்பாடுகளை வட்டார மேலாளா் அருள்செல்வி, வட்டார ஒருங்கிணைப்பாளா் முத்துலட்சுமி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.