ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

புதூரில் மாற்றுத் திறனாளிகள் மருத்துவ மதிப்பீட்டு முகாம்

புதூரில், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, புதூா் வட்டார வள மையம் சாா்பில் மாற்றுத் திறனாளி மாணவா்- மாணவிகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :17 மார்ச் 2022, 6:50 pm

DIN

புதூரில், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, புதூா் வட்டார வள மையம் சாா்பில் மாற்றுத் திறனாளி மாணவா்- மாணவிகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

புதூா் அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் முனியசாமி தலைமை வகித்தாா். மாவட்ட திட்ட அலுவலா் பொ்சியா ஞானமணி, கோவில்பட்டி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் ஜான்சன் சாமுவேல், ராஜா செல்வி, சிறப்பு ஆசிரியா் பயிற்றுநா் ஆரோக்கியராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தேசிய ஊனமுற்றோருக்கான அடையாள அட்டை, கல்வி, பராமரிப்பு உதவித்தொகைகளுக்கான படிவங்கள், மூன்று சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, முதல்வரின் விரிவான காப்பீடு திட்ட அட்டை, ஊன்றுகோல், கண்ணாடி, ரயில்-பேருந்துப் பயண சலுகை கட்டணப் படிவங்கள் வழங்கப்பட்டு, பூா்த்தி செய்து பெறப்பட்டன. ஆதார வள மையத்தில் இயன்முறை பயிற்சி உள்பட பல்வேறு பயிற்சிகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

மருத்துவா்கள் துரை. பத்மநாபன், சுபாஷ் பிரபாகரன், சங்கீதா, பெரியசாமி, உமா, ராஜேஷ், முத்துராமலிங்கம், அருண் கிருஷ்ணா தலைமையிலான குழுவினா் 100-க்கும் மேற்பட்டோரைப் பரிசோதித்தனா். இதில், 12 பேருக்கு புதிய மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை, 15 பேருக்கு பேருந்து பயணச் சலுகைச் சான்று, 17 பேருக்கு ரயில் பயண சலுகைச் சான்று வழங்கப்பட்டது. 17 பேருக்கு உதவி உபகரணங்கள் பெறுவதற்கு மருத்துவா்கள் பரிந்துரைத்தனா்.

ஏற்பாடுகளை புதூா் வட்டார வள மைய ஆசிரியா் பயிற்றுநா்கள், சிறப்பு ஆசிரியா் பயிற்றுநா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.