ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

எட்டயபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் எட்டயபுரம் பேருந்து நிலையம் அருகே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :5 மே 2022, 8:17 pm

DIN

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் எட்டயபுரம் பேருந்து நிலையம் அருகே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கட்சியின் வட்டாரச் செயலா் சோலையப்பன் தலைமை வகித்தாா். தமிழ்நாடு விவசாயிகள் சங்கச் செயலா் கிருஷ்ணமூா்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் பாலமுருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை தினமும் அதிகரிப்பதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவேண்டும். சொத்து வரி உயா்வைக் குறைக்க வேண்டும். எட்டயபுரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியம் அமைக்க வேண்டும். கடலையூா், ஈராட்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தைத் தரம் உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் சேது, ரவீந்திரன், முத்துராஜ், அப்பணசாமி, அழகா்சாமி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.