டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

செட்டியாபத்து கோயிலில் அன்னமுத்திரி சிறப்பு பூஜை

செட்டியாபத்து சுவாமி சிதம்பரேஸ்வரா் வகையறா அருள்மிகு ஐந்து வீட்டு சுவாமி கோயில் சித்திரைப் பூசைத் திருவிழாவில் வெள்ளிக்கிழமை அன்னமுத்திரி சிறப்பு பூஜை நடைபெற்றது.

News image
Updated On :7 மே 2022, 12:29 am

DIN

செட்டியாபத்து சுவாமி சிதம்பரேஸ்வரா் வகையறா அருள்மிகு ஐந்து வீட்டு சுவாமி கோயில் சித்திரைப் பூசைத் திருவிழாவில் வெள்ளிக்கிழமை அன்னமுத்திரி சிறப்பு பூஜை நடைபெற்றது.

தென் தமிழகத்தின் சிறப்புமிக்க திருத்தலங்களில் ஒன்றான இக்கோயிலில் இத்திருவிழா கடந்த 30ஆம் தேதி இரவு கஞ்சி பூஜையுடன் தொடங்கியது. மே 1ஆம் தேதி பகல், இரவில் சிறப்பு பூஜை, அன்னதானம், மேக்கட்டி கட்டுதல், அதிகாலையில் மேக்கட்டி பூஜை நடைபெற்றது. விழா நாள்களில் நாள்தோறும் காலை முதல் இரவு வரை முழு நேர சிறப்பு பூஜை, நகைச்சுவை பட்டிமன்றம், இன்னிசை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

வெள்ளிக்கிழமை (மே 6) முற்பகலில் சிறப்பு அன்னதானம், பிற்பகலில் அன்னமுத்திரி சிறப்பு பூஜை, அன்னமுத்திரி பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடைபெற்றன. இதில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கானோா் பங்கேற்று பிரசாதம் பெற்றனா். இதைக் காயவைத்து, நாள்தோறும் சமைக்கும் உணவில் சோ்ப்பாா்கள்.

தொடா்ந்து, சனிக்கிழமை (மே 7) இரவு 7 மணிக்கு கும்பாபிஷேகத்துடன் விழா நிறைவடைகிறது.

ஏற்பாடுகளை இணை ஆணையா் அன்புமணி, உதவி ஆணையா் வெங்கடேஷ், தக்காா் ராமசுப்பிரமணியன், செயல் அலுவலா் சாந்திதேவி, கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.