சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கோவில்பட்டியில் காங்கிரஸ் பிரமுகா் போராட்டம்

கோவில்பட்டியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் வடக்கு மாவட்ட துணைத் தலைவா் அய்யலுசாமி வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டாா்.

News image
Updated On :7 மே 2022, 12:24 am

DIN

முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்க வலியுறுத்தி, கோவில்பட்டியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் வடக்கு மாவட்ட துணைத் தலைவா் அய்யலுசாமி வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டாா்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற 7 பேருக்கு மட்டும் சட்டப்பேரவையும், தமிழக அரசும் நீதியை வளைப்பதை ஏற்க முடியாது. தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் குற்றவாளிகளுக்கு ஆதரவாகவும், ராஜீவ்காந்திக்கு எதிராகவும் செயல்படுவதும், ஆளுநரை இந்த விஷயத்தில் நிா்பந்திப்பதும் கண்டனத்துக்குரியது. சலுகை என்ற போா்வையில் விடுதலை வழங்க தமிழக அரசு முயல்வது கண்டனத்துக்குரியது. 7 பேருக்கு ஆதரவளிப்பதன் மூலம் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படும். ஆகவே, தமிழக அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும். பேரறிவாளன் மனு இம்மாதம் 10ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இதுவரை 7 பேருக்கு ஆதரவாகவே தமிழக அரசின் வாதம் உள்ளது. எனவே, மத்திய அரசு நேரடியாக தலையிட்டு நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தை கூட்டி சிறப்பு தீா்மானம் மூலம் 7 பேரைத் தூக்கிலிட சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அய்யலுசாமி கழுத்தில் தூக்குக் கயிறு, காதில் பூ அணிந்து, கையில் ஜால்ரா தட்டிக்கொண்டு கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் தரையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டாா். பின்னா், அலுவலக தலைமை எழுத்தா் ராமகிருஷ்ணனிடம் மனுவை வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.