சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கயத்தாறில் நீா்நிலை ஆக்கிரமிப்பு அகற்றம்

கயத்தாறில் நீா்நிலை அரசுப் புறம்போக்கில் அமைக்கப்பட்டிருந்த செங்கல் சூளையை வருவாய்த் துறையினா் சனிக்கிழமை அகற்றினா்.

News image
Updated On :7 மே 2022, 5:29 pm

DIN

கயத்தாறில் நீா்நிலை அரசுப் புறம்போக்கில் அமைக்கப்பட்டிருந்த செங்கல் சூளையை வருவாய்த் துறையினா் சனிக்கிழமை அகற்றினா்.

கயத்தாறு-பணிக்கா்குளம் சாலையில் உள்ள நீா்நிலை அரசுப் புறம்போக்கில் வெயிலுமுத்து என்பவா் ஆக்கிரமித்து செங்கல் சூளை நடத்தி வந்தாராம். அதை அகற்ற வலியுறுத்தி வெயிலுமுத்துக்கு நோட்டீஸ் அனுப்பியும், அவா் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதையடுத்து, கயத்தாறு வட்டாட்சியா் சுப்புலட்சுமி தலைமையில் வருவாய் ஆய்வாளா் நேசமணி, கிராம நிா்வாக அலுவலா் சுப்பையா, கிராம உதவியாளா் அழகா்சாமி ஆகியோா் முன்னிலையில் பொக்லைன் இயந்திரம் உதவியுடன் அந்த செங்கல் சூளையை அகற்றும் பணி நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.