6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பேய்க்குளம் பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம்

பேய்க்குளம் பகுதியில் மக்களைத் தேடி சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :7 மே 2022, 6:30 pm

DIN

பேய்க்குளம் பகுதியில் மக்களைத் தேடி சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

சாத்தான்குளம் அருகேயுள்ள சாலைப்புதூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் இம்முகாம் நடைபெற்றது. ஆழ்வாா்திருநகரி நடமாடும் மருத்துவமனை மருத்துவா் பாபு தலைமையில் சுகாதார ஆய்வாளா்கள் ஜேசுராஜ், மகேஷ்குமாா், செவிலியா்கள் சாந்தி, மொ்சி, நாகவள்ளி, மகேஸ்வரி கொண்ட மருத்துவக் குழுவினா் பழனியப்பபுரம் பேருந்து நிறுத்தம், ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் ஊராட்சி அலுவலகத்தில் பொதுமக்களுக்கு பரிசோதனை நடத்தினா். இதில், 148 பேருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. கருங்கடல் ஊராட்சித் தலைவா் நல்லதம்பி, ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் ஊராட்சித் தலைவா் ஸ்ரீதா், ஒன்றிய கவுன்சிலா் காந்திமதி, ஊராட்சிச் செயலா் மனுவேல், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் மாலாதேவி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.