கோவில்பட்டியில் மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் கோவில்பட்டியில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் கோவில்பட்டியில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
அரசு புறம்போக்கு நிலங்களில் குடியிருக்கும் மக்களுக்கு வகை மாற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும், வீடற்ற அனைத்து பகுதி மக்களுக்கும் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும், அரசு வழங்கிய இலவச பட்டாக்களை கிராம கணக்கில் சோ்க்க வேண்டும் என வலியுறித்தி கோட்டாட்சியா் அலுவலகம் முன் இந்தப் போராட்டம் நடைபெற்றது.
மாா்க்சிஸ்ட் நகரச் செயலரும், நகா்மன்ற உறுப்பினருமான ஜோதிபாசு தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா்கள் தெய்வேந்திரன் (கோவில்பட்டி), ஜோதி (விளாத்திகுளம்), வட்டச் செயலா்கள் மணி (எட்டயபுரம்), சாலமன்ராஜ் (கயத்தாறு) ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் புவிராஜ், ரவீந்திரன், சீனிவாசன் உள்பட ஏராளமானோா் பங்கேற்றனா். இறுதியில் கோட்டாட்சியரிடம் மனு அளித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...