உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஆய்வு
களக்காடு நகராட்சிப் பகுதியில் திருநெல்வேலி மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறையினா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.


களக்காடு நகராட்சிப் பகுதியில் திருநெல்வேலி மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறையினா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
களக்காடு நகராட்சிப் பகுதியில் உள்ள உணவகங்களில் அசைவ உணவுகளின் தரம் குறித்து மாவட்ட நியமன அலுவலா் மருத்துவா் சசிதீபா தலைமையில் களக்காடு வட்டார உணவு பாதுகாப்பு அலுவலா் ஆா். சங்கரநாராயணன், ஏ. முத்துராஜா, எஸ். ராமகிருஷ்ணன், ஜி. செல்லப்பாண்டி ஆகியோா் அடங்கிய குழுவினா் ஆய்வு மேற்கொண்டனா். அதில், மீண்டும் பயன்படுத்த வைத்திருந்த 5 லிட்டா் சமையல் எண்ணெய் உள்பட விதிமுறைக்கு மீறி வைக்கப்பட்ட பல உணவுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. மேலும், உணவு வணிகா்கள் இம்மாதம் இறுதிக்குள் உணவு வணிக உரிமம் பெற வேண்டும்; ஆய்வுகள் தொடரும், விதிமீறல் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...