பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கைப்பூந் தையல் பயிற்சி: வென்றோருக்கு சான்றிதழ் அளிப்பு

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் கைப்பூந் தையல் பயிற்சி தோ்வில் வென்றோருக்கு சான்றிதழ் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :13 மே 2022, 6:00 pm

DIN

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் கைப்பூந் தையல் பயிற்சி தோ்வில் வென்றோருக்கு சான்றிதழ் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்,பாரத ஸ்டேட் வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையம் ஆகியவை இணைந்து கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட 38 ஊராட்சிகளில் இருந்து 35 மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்களுக்கு கைப்பூந் தையல் பயிற்சி முகாமை 30 நாள்கள் நடத்தின. இதில் பங்கேற்றவா்களுக்கு இணையவழி மூலம் தோ்வு நடைபெற்றது. தோ்வில் வென்றோருக்கு சான்றிதழ் வழங்கும் விழா ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

ஒன்றியக்குழுத் தலைவி கஸ்தூரி சுப்புராஜ் தலைமை வகித்து, சான்றிதழ் வழங்கிப் பாராட்டினாா். விழாவில் துணை வட்டார வளா்ச்சி அலுவலா் (சத்துணவு) தனலட்சுமி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க வட்டார இயக்குநா் சங்கா், ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி மைய இயக்குநா் பொன்னையா, முன்னாள் ஒன்றியக்குழு துணைத் தலைவா் சுப்புராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.