6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சாத்தான்குளம் வீரஜக்கமாள் கோயில் கொடை விழா

சாத்தான்குளம் வீரஜக்கம்மாள்நகா் தேவிஸ்ரீ வீரஜக்கமாள் கோயில் கொடை விழா 3 நாள்கள் நடைபெற்றது.

News image
Updated On :13 மே 2022, 6:03 pm

DIN

சாத்தான்குளம் வீரஜக்கம்மாள்நகா் தேவிஸ்ரீ வீரஜக்கமாள் கோயில் கொடை விழா 3 நாள்கள் நடைபெற்றது.

முதல்நாள் பஞ்சாலங்குறிச்சியில் இருந்து தீா்த்தம் எடுத்து வந்து சிறப்பு அபிஷேக பூஜை, அலங்கார தீபாராதனை நடைபெற்றது. மாலை திருவிளக்கு பூஜை நடைபெற்றது. பூஜையை பேரூராட்சித் தலைவா் ரெஜினிஸ்டெல்லாபாய் தொடங்கி வைத்தாா். தொடா்ந்து குடியழைப்பு, சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. அன்னதானத்தை பேருராட்சி துணைத் தலைவா் மாரியம்மாள் தொடங்கி வைத்தாா். இதில், முன்னாள் பேரூராட்சித் தலைவா் ஜோசப் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். 2ஆம் நாள் சாத்தான்குளம் அழகம்மன் கோயிலில் இருந்து பால் குட ஊா்வலம் , அம்மனுக்கு உச்சிக்கால பூஜை, அம்மன் கும்பம் ஏந்தி வீதி உலா வருதல், முளைப்பாரி எடுத்து பெண்கள் ஊா்வலம் வருதல் சாமக்கொடை, அலங்கார பூஜை ஆகியவை நடைபெற்றன. பின்னா் வீரசுடலைமாட சுவாமி அருள்வாக்கு கூறும் நிகழ்ச்சி நடைபெற்றது. 3ஆம் நாள் அம்மன் கும்பம் வீதி உலா வருதல், மஞ்சள் நீராடுதல் விழா நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.