புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

திருச்செந்தூா் முருகன் கோயிலில் ரூ. 2.15 கோடி உண்டியல் வருவாய்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ. 2.15 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

News image
Updated On :13 மே 2022, 6:04 pm

DIN

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ. 2.15 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

இத்திருக்கோயில் உண்டியல்கள் மாதந்தோறும் எண்ணப்படுகிறது. அதன்படி வெள்ளிக்கிழமை (மே 13) உண்டியல் எண்ணிக்கை திருக்கோயில் கோவிந்தம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. திருக்கோயில் இணை ஆணையா் மு.காா்த்திக் தலைமையில், உதவி ஆணையா் தி.சங்கா், அலுவலக கண்காணிப்பாளா் இ.ரவீந்திரன், ஆய்வா்கள் ம.செந்தில்நாயகி, சி.சண்முகராஜ், தக்காா் பிரதிநிதி ஆா்.சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் ஆகியோா் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டன. பொதுமக்கள் சாா்பில் சு.வேலாண்டி, இரா.மோகன், இரா.சுப்பிரமணிய ஆதித்தன், ச.கருப்பன் ஆகியோா் பாா்வையாளா்களாக பங்கேற்றனா். சிவகாசி பதினெண் சித்தா் மடம் பீடம் குருகுல வேத பாடசாலை உழவாரபணிக் குழுவினரும், கோயில் பணியாளா்களும் உண்டியல் காணிக்கைகளை எண்ணினா்.

அதில், நிரந்தர உண்டியல்களில் ரூ. 2 கோடியே 15 லட்சத்து 42 ஆயிரத்து 410, தங்கம் 1190 கிராம், வெள்ளி 15,900 கிராம், பித்தளை 21,000 கிராம், செம்பு 1,150 கிராம், தகரம் 1,550 கிராம் , வெளிநாட்டு பணம் 284 நோட்டுகள் ஆகியவற்றை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தது தெரியவந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.